உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை : ஜப்பான் முதலிடம் – இந்தியாவின் தரவரிசை என்ன ?
உலக நாடுகளில், குடிமக்கள் தங்களது நாடுகளில் இருந்து சுற்றுலா, வாழ்க்கை தேவைகள் உள்ளிட்ட விசயங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். எனினும், அவற்றுடன் விரும்பிய நாடுகளுக்கு உடனடியாக செல்ல விசா அனுமதி அவசியம். ஒரு சுற்றுலாப் பயணியாக தங்கள் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது விசா ஆன் அரைவல் முறையில் சென்றுவர முடிகிறது என்பதின் அடிப்படையில் பாஸ்போர்ட்டின் சக்தி நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ஆக முதலிடத்தில் உள்ளது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். இந்த பட்டியலில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா 2-வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இந்த பட்டியலில் இந்தியா 87-வது இடத்தில் உள்ளது. இந்திய நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 60 நாடுகளுக்கு விசா இல்லமால் செல்ல தற்போது அனுமதி உள்ளது. இந்த பட்டியலில் ரஷ்யா 50-வது இடத்தில் உள்ளது. சீனா 69-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. தலீபான் ஆட்சி நடக்கும் அந்த நட்டில் இருந்து 27 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியும். இதனால் அந்த நாடு கடைசி இடமான 112-வது இடத்தில் உள்ளது
![]()