விதிகளை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் புல்டோசர் ஏற்றி அழிப்பு!

நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது. இதனை நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இந்த இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தெரிவித்த மேயர் ஆடம்ஸ், இந்த இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவது கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டில் அதிகரித்திருப்பதாக கவலை தெரிவித்தார்.

ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் வாகனங்களில் முதற்கட்டமாக 100 வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். அழிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களின் கழிவுகள் அனைத்தும் பழைய உலோகங்களாக மாற்றப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *