ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி -சட்டென பாய்ந்த காவலர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்புர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை வயதான பெண்மணி ஒருவர் ரயில் வேகமாக வருவதை அறியாமல் தளர்ந்த நடையுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். இதனை அருகிலிருந்து கவனித்த ரயில்வே காவலர் ஒருவர் சட்டென பாய்ந்து அந்தப் பெண்ணை பிளாட்பாரத்துக்கு இழுத்துபோட்டு அவரது உயிரைக் காப்பாற்றினார். சில நொடிகள் தாமதித்திருந்தால் கூட அந்த பெண் ரயிலில் சிக்கி விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும். ஆனால் ரயில்வே காவலரின் துணிச்சலான செயலால் அந்த பெண் காப்பற்றப்பட்டிருக்கிறார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகளை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *