Featureகட்டுரைகள்
வேதாளம் மீண்டும்…. கிறிஸ்டி நல்லரெத்தினம்.

இலங்கையின் அரசியல் நிலமை பற்றி ஆய்வாளர்கள் எழுதிய மை காயும் முன்னே நிலமைகள் அசுர வேகத்தில் மாறிக்கொண்டிருக்கின்றன. அரசியல் ஆய்வாளர்களின் அழி இரப்பருக்கு இத்தனை வேலை என்றும் இருந்ததில்லை! புதிய பிரதமர் ரணிலின் தெரிவை ஆதரித்து அமெரிக்கா, இந்தியா முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்து இருப்பது, ‘இதுவும் இவர்கள் கைவேலைதானோ’ என எண்ணத் தோன்றுகிறது. சீனாவின் பக்கம் சாய்ந்தால் “என் எதிரி உங்களினதும் எதிரி ” எனும் அமெரிக்க விதிக்கமைய ‘இம்ரான் கானை வீழ்த்திய கதியே உங்களுக்கும்’ என்கிறதோ அமெரிக்கா?பாவம் சஜித்….. காலை வாய்க்குள் வைத்தாற்போல் நேற்று சீன தூதுவரை வேறு சந்தித்து இன்று சீன dumpling போல அவிந்து போய் இருக்கிறார். என்பதை விட எப்படிச்
செல்கிறோம் என்பதே முக்கியம்.‘ஜனாதிபதி கோட்டாபய குறித்த காலத்தினுள் பதவி விலகினாலேயே நான் பிரதமர் பதவியை ஏற்பேன்’ என்றார் சஜித்.
JVP தலைவர் அனுரகுமாரவோ: ‘கோட்டாபய பதவி விலகினாலேயே நாம் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்போம்’ என்றார்.ரணில் மிக தந்திரமாக இப்படிப் போட்டார் : “நான் பிரதமர் பதவி ஏற்பதானால் ஜனாதிபதி காலி முகத்திடலில் உள்ள “கோட்டா கோ கம” வில் கைவைக்கக் கூடாது” என்றார். ஏறத்தாள மூவரும் சொன்னது ஒன்றுதான். ஆனால் ரணிலின் வார்த்தை ஜாலமும் அரசியல் சாணக்கியம் மட்டுமே இங்கு விலை போனது!ஜனாதிபதி கோட்டாபய சிறிமா அம்மையார் 1972 கட்டிய குடியரசு தேரில் சொகுசாய் ஏறி அமர்ந்து கொண்டு இறங்கி வர மறுக்கிறார்.அந்த தேருக்கு 1977ல் குஞ்சம் கட்டிய JR ஜெயவர்த்தன வானில் நின்று இங்கு நடப்பதைக் கண்டு புன்னகைக்கிறார்.
அவரின் புன்னகைக்கு காரணம் இல்லாமல் இல்லை.JR இன் அரசியல் நரித்தனத்தின் சுருக்கமே இதை நன்கு விளக்கும்:JR ஜயவர்த்தன ஜனாதிபதி பதவியை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியாக மாற்றி 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்தினார். இத் திருத்தத்தின் விதிகள் தானாகவே அப்போதைய பிரதமரான அவரை ஜனாதிபதியாக ஆக்கியது, இதன் விளைவாக அவர் 4 பிப்ரவரி 1978 அன்று ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் 31 ஆகஸ்ட் 1978 அன்று ஒரு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றினார், அது அதே ஆண்டு செப்டம்பர் 7 அன்று நடைமுறைக்கு வந்தது. இது ஜனாதிபதிக்கு ஏறக்குறைய சர்வாதிகார அதிகாரங்களை அள்ளி வழங்கியது. அவர் சட்டமன்றத் தலைநகரை கொழும்பிலிருந்து ஸ்ரீ ஜெயவர்தனபுரவிற்கு மாற்றினார். அதே கையோடு அவர் SLFP ஜனாதிபதி வேட்பாளர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடிமை உரிமைகளை வேறு பறித்தார். 1976 இல் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க சிறிமாவோ எடுத்த முடிவு தவறெனக் கூறி அவருக்கு ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இது 1982 தேர்தலில் அவருக்கு எதிராக பலமான வேட்பாளரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் நிறுத்த முடியாது என்பதை உறுதிசெய்து JR இன் வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுத்தது. ஜனாதிபதியின் முதல் பதவிக்காலத்தின் நான்கு வருடங்கள் முடிவடைந்த பின்னர் எப்பொழுது வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கிய அரசியலமைப்பின் 3 வது திருத்தத்தின் கீழ் இந்த தேர்தல் நடத்தப்பட்டது. அவர் 1983 நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்ய வாக்கெடுப்பு (referendum) நடத்தினார். மேலும் 1977 நாடாளுமன்றத்தை 1989 வரை தொடர அனுமதித்தார். பிரிவினைவாதத்தை ஆதரித்த எந்தவொரு எம்.பி.யையும் நாடாளுமன்றத்தில் இருந்து தடுக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தையும் அவர் நிறைவேற்றினார். இது அப்போதய முக்கிய எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு திரைபோட்டது.இதுவே எமது ஜனாதிபதி ஆட்சி முறையின் கூர்ப்பு!ரணில் தனது மாமா JR சமைத்து வைத்த அரசியலமைப்புச் சட்டத்தின் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு சிக்கெடுத்து நாட்டை காப்பாற்றுவார் என நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்து நிற்கின்றனர்.ஒரு வலுவான, திறமையான, பல கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவை என்பது பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதை உறுதிசெய்வதற்கும் (அல்லது குறைந்தபட்சம் அதை சமநிலைப்படுத்துவதற்கும்) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய – பிரதமர் ரணிலிற்க்கு இடையில் எந்தவிதமான விரும்பத்தகாத ‘டீல்களை’ தடுப்பதற்கும் சிறந்த வழியாகும். கட்டாய அரசியலமைப்புத் திருத்தங்கள் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படுவதையும் பல கட்சி அமைப்பு நிச்சயம் அழுத்தங்களை கொடுத்து உறுதி செய்யும் என நம்பலாம்.
இன்று மொட்டு கட்சியின் அமைச்சர்கள் – மகிந்த உட்பட- எலி வளைக்குள் புகுந்து வெளி வர முடியாமல் தவிக்கின்றனர்.
திருமலை கடற்படை தளத்தில் ஒளிந்து கொண்டு மாஜி பிரதமர் மகிந்த “நான் சுகமாய் உள்ளேன் ….. உடல் பயிற்சி செய்கிறேன்” என கூறியுள்ளதாய் செய்தி வந்துள்ளது.
திருமலை கடற்படை தளத்தில் ஒளிந்து கொண்டு மாஜி பிரதமர் மகிந்த “நான் சுகமாய் உள்ளேன் ….. உடல் பயிற்சி செய்கிறேன்” என கூறியுள்ளதாய் செய்தி வந்துள்ளது.ஆனால் உண்மை என்னவோ கவிஞரின் இந்த வரிகளே! பாய் விரித்துப் படுப்பவரும்வாய் திறந்து தூங்குகிறார்;பஞ்சணையில் நான் படுத்தும்நெஞ்சிலோர் அமைதியில்லை.கொஞ்சி வரும் கிளிகளெல்லாம்கொடும் பாம்பாய் மாறுதடா;கொத்தி விட்டு புத்தனைப் போல்சத்தியமாய் வாழுதடா.சொன்னாலும் வெட்கமடாசொல்லாவிட்டால் துக்கமடா;துக்கமில்லாமல் வெட்கமில்லாமல்வாழுகிறேன் ஒரு பக்கமடா.
அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டி நிற்கும் இலங்கை மக்களுக்கு ஒரு விடிவு விரைவில் எட்டும் என நம்புவோமாக!முற்றும்
![]()