லவ் பண்ணி ஏமாத்தினா 10 ஆண்டு ஜெயில்… நீதிமன்றம் அப்படிப்போடு தீர்ப்பு

கடலூர் புதுப்பாளையம் லோகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார். இவர் 27 வயது பெண்ணை காதலித்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகி உள்ளார். அதை நம்பி அப்பெண் தனது திருமணத்திற்கு பெற்றோர் வைத்திருந்த 50 சவரன் நகையை கொடுத்தார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பழகிய நிலையில் திருமணம் செய்ய பிரவீன்குமார் மறுத்துள்ளார்.

இந்நிலையில் வேறு பெண்ணுடன் பிரவீன்குமாருக்கு திருமணம் நடந்துள்ளது இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் 2018ஆம் ஆண்டு தனது தந்தையுடன் பிரவீன்குமார் வீட்டிற்கு சென்று கேட்டபோது பிரவீன்குமார் அவரது தந்தை பாலகிருஷ்ணன், தாய் நிர்மலா, சகோதரர் பிரசன்னகுமார் ஆகியோர் சேர்ந்து இருவரையும் திட்டி தாக்கியுள்ளனர்.

மீண்டும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வீட்டிற்கு வந்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்ட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் கடலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரவீன்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட 4 பேரை கைது செய்து கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் பெண்ணை ஏமாற்றிய பிரவீன்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அவரது தந்தை பாலகிருஷ்ணன், தாய் நிர்மலா, சகோதரர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட்டது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *