மைக் டைசன் குத்து பாத்துருக்கியா..? பயணியை வாயிலேயே குத்திய டைசன்!

விமானத்தில் எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொண்ட சக பயணியை முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த மாஜி குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்,56 புகழின் உச்சியில் இருந்த போது கற்பழிப்பு, மற்றும் போதை மருந்து போன்ற பிரச்னைகளில் சிக்கி, தன் புகழை இழந்தார்.

இந்நிலையில் விமானத்தில் உடன் பயணித்த சக இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில் சான்பிரான்ஸ்சிகோ நகரிலிருந்து, புளோரிடாவிற்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார் ‘மைக் டைசன்.

அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் மைக் டைசனிடம், தொடர்ந்து பேச்சு கொடுக்கவும், செல்பி எடுக்கவும் என எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த மைக் டைசன், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த மற்றொரு பயணி மொபைல் கேமிராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
அடி வாங்கிய அந்த இளைஞர் ரத்த காயங்களுடன் சோகத்துடன் அமர்ந்திருந்தது பரிதாமாக இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *