ஏப் 26ம் தேதி எனக்கு கல்யாணம், என்னைய கூட்டிட்டு போய்டு டா…” 10 ரூபாய் நோட்டில் பரவும் “காவிய” காதல்

நடிகர் மாதவன் நடித்த ஜே ஜே திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த படத்தின் கதையே கதாநாயகனும், கதாநாயகியும் முதன் முறை சந்தித்த போது இவரும் தங்கள் முகவரியை ஒரு ரூபாய் நோட்டில் எழுதி வைத்து சென்று விடுவர் பின்னர் இவரும் அந்த ரூபாய் நோட்டை தேடுவதே அந்த படத்தின் கதை.

தற்போது வட இந்தியாவில் இப்படியாக ரூபாய் நோட்டு காதல் ஒன்று டிரெண்டாகியுள்ளது. சமீபத்தில் 10 ரூபாய் நோட்டில் அந்த ரூபாய் நோட்டில் காதலி ஒருவர் தன் காதலருக்காக ஒரு தகவலை பரிமாறியுள்ளார். அந்த ரூபாய் நோட்டு தன் காதலருக்கு கிடைத்து தன் காதலர் எப்படியாவது தன்னை வந்து காப்பாற்றுவார் என்று இதை செய்துள்ளதாக தெரிகிறது.

அந்த ரூபாய் நோட்டில் இந்தி மொழியில் “விஷால், ஏப் 26ம் தேதி எனக்கு கல்யாணம், என்னை உன்னுடன் அழைத்து சென்றுவிடு, ஐ லவ் யூ – குஷூம்” என எழுதப்பட்டுள்ளது. குஷூம் என்ற பெண் தன் காதலர் விஷாலுக்கு எழுதியது போல இந்த பணத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதை நெட்டிசன் ஒருவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “ட்விட்டர் வாசிகளே உங்கள் பவரை காண்பியுங்கள். இது நாம் குஷூமை விஷாலுடன் சேர்த்து வைக்கும் நேரம், உங்களுக்கு தெரிந்த விஷாலை எல்லாம் இந்த போஸ்டில் டேக் செய்யுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதால் தமிழ் நாட்டில் பலருக்கு இதற்கு அர்த்தம் தெரியவில்லை. ஆனாலும் இந்தி தெரிந்த சிலர் இதைபகிர்ந்து சமூகவலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *