சொத்து தகராறில் அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவருக்கு 4 தம்பிகள், 2 தங்கைகள் உள்ளனர். இவர்களுக்குரிய சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இருந்துள்ளனர். சொத்தை பிரித்து தரச்சொல்லி பழனிச்சாமியின் நான்காவது தம்பி சிவசாமி (52) அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு அப்பகுதியில் உள்ள பிடாரியம்மன் கோவில் அருகில் வயல்வெளியில் பழனிச்சாமிக்கும், சிவசாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிப்போய் சிவசாமி அண்ணன் பழனிச்சாமியை கீழே தள்ளி தலையை தரையில் மோதியும், காலால் மிதித்தும் உள்ளார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் அண்ணனை தம்பி காலால் மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *