இலக்கியச்சோலை

கதைத்தொகுப்பின் கதை!… என்ற சிறுகதையை வாசித்த போது!… ஏலையா க.முருகதாசன்.

“கதைத் தொகுப்பு ” என்ற சிறுகதையை வாசித்த போது அட்டை இல்லாத, பக்கங்கள் இல்லாத, சுந்தரி ரீச்சரின் சிறுகதைப் புத்தகம் கைதுடைக்கும் தாளாக மாறியதை வாசித்த போது கொச்சிக்கடையில் நான் இருந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவு மீட்க உதவியது.

கொச்சிக்கடையில் கொழும்பு வீதியில் இருந்த தமிழரின் பலசரக்குக் கடைக்கு மாலை வேளைகளில் சென்று கதைத்துக் கொண்டிருப்பேன். அங்கு ஒரு சாக்கிற்குள் பொருட்களைச் சுற்றிக் கொடுக்கவென பத்திரிகைகள் புத்தகங்கள் என இருக்கும்.எனது கைகள் அவற்றை கிழறி எடுத்து வாசிக்க முடிந்ததை மேலோட்டமாக வாசிப்பேன்.

ஒரு நாள் சாக்கிற்குள் கையைவிட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டிருந்த போது ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய திருக்குறள் புத்தகம் என் கண்ணில் பட்டது.

அங்கு வேலை செய்தவர்களிடம் „ என்ன திருக்குறள் புத்தகம் இதற்குள் இருக்கின்றதே „எனக் கேட்க, இப்படி எத்தனையோ புத்தகங்கள் வரும் என்றனர் அங்குள்னவர்கள்.

அந்தப் புத்தகத்தின் முன் பக்கங்களும் பின் பக்கங்களும் கிழிந்திருந்தன.புத்தகத்தின் நிலை கண்டு கவலை ஏற்பட்டாலும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இருந்ததால் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

வீட்டுக்கு கொண்டு வந்த நான் அதற்கு மட்டை போட்டு பசையால் ஒட்டி ஒழுங்படுத்தி நீர்கொழும்பில் தமிழரால் நடத்தப்பட்டஅச்சகத்திற்கு கொண்டு போய் ;(கடற்கரைக்குப் நோக்கிப் போகும் வீதியில் கால்வாய்க்கு கிழக்குப் பக்கமாகவும் நல்லதம்பி புடவைக் கடைக்கு வடக்குப்புறமாகவும்) திருக்குறள் புத்தகத்தின் மூன்று பக்கங்களையும் அழகாக வெட்டுவிச்சு கொண்டு வந்தேன். கொச்சிக்கடையில் இருந்த காலங்களில் ஆனந்தவிகடன் குமுதம் கல்கி ஆகிய சஞ்சிகைளில் வரும் தொடர்கதைகளை நானும் தங்கச்சியும் கிழித்து கவனமாக நேர்த்தியாக பசை

பூசி காடபோட் மட்டை வாங்கி அட்டை ஒட்டி அதற்கு மேல் அழகான தாள் ஒட்டி அதை நீர்கொழும்பிலுள்ள தமிழரின் அச்சகத்தில் கொடுக்க அதை அங்குள்ள இளைஞர் இயந்திரத்தால் அமத்தி வெட்டித் தருவார்.அவர் அதற்கு காசு வாங்க மாட்டார்.

 

பல அறிவுப் பொக்கிசங்கள் பொருட்களைச் சுற்றுவதற்கு பயன்பட்ட வரலாறு உண்டு.

உங்கள் கதையில் நீங்கள் கல்வி கற்ற போது கற்பித்துக் கொடுத்த உண்மையான ஆசிரியையின் பெயரும் வந்திருக்கின்றது.(சிவகாமசுந்தரி(சுந்தரி ரீச்சர்).நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

 

ஏலையா க.முருகதாசன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *