கதைகள்
‘பிக்பொக்கற்’…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)
‘பிக்பொக்கற்’
பொதுவாக பேருந்தில் பயணிகள் பின்னாலே ஏறுவார்கள், முன்னாலே இறங்குவார்கள். அன்று திட்டமிட்டு – சிலர் முன்புறமாக ஏறி வரிசையைக் குழப்ப, பின்னாலே நின்ற ஒருவன், என் ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்த காசை அடித்துவிட்டான்.
அடுத்த தடவை, ஒரு பேப்பரை எட்டாக மடித்து பொக்கற்றினுள் வைத்துக் கொண்டேன். தரிப்பிடத்தில் நின்று அடிக்கடி அதைத் தடவிப் பார்த்தேன்.
காரியம் கைகூடியது. அன்றும் அதே விளையாட்டு. அந்தப் பேப்பருக்கும் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான் அவன்.
![]()