கட்டுரைகள்

சாமானியனின் சரடு…..சரடு…1… சங்கர சுப்பிரமணியன்.

அந்த காலத்தில் இருந்து இக்காலம் அவரை வாயுள்ளவன் பிழைத்துக் கொள்வான் என்பார்கள். அதாவது ஊமையாய் இல்லாமல் பேசத் தெரிந்தவன் பிழைத்துக் கொள்வான். இதற்கு எதிர்மறையாக வாயினால் பிழைத்துக் கொண்டதற்கு ஒருகதை கூட சொல்வார்கள்.

ரோஜாத் தோட்டத்தில் ரோஜா மலர் சிலவற்றை திருடிய சிறுவன் ஒருவன் கையும் களவுமாகப் பிடிபட்டான். தோட்டம் ராஜாவினுடையது. எனவே சிறுவனை அரசனிடம்
அழைத்துச் சென்றனர். அழைத்துச் செல்லும்போது சிறுவனின் தந்தை பார்த்துவிட்டார். அரசனிடம் அழைத்துச் சென்றால் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

இதற்கு சிறு தண்டனை என்றாலும் மகனுக்கு திருடன் என்ற பட்டம் கிடைத்துவிடுமே என்று பதறிய தந்தை மகன் காதில் கேட்கும்படி “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்றார். மகன் யோசிக்கத் தொடங்கினான். காவலர்கள் மகனை அப்பா அரசனிடம் வாதிடும் திறமையால் தப்பிக்க கூறுகிறார் என எண்ணிக் கொண்டனர். ஆனால் மகனோ அப்பா சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்டான்.

அரண்மனைக்குள் செல்வதற்குள் ரோஜா மலர்களைத் தின்றுவிட்டான். அரண்மனையை அடைந்ததும் நடந்த விபரத்தை காவலர்கள் விளக்கினர். சிறுவனிடம் பூக்கள் இல்லாததால் அரசன் காவலர்களைத் திட்டியதோடு சிறுவனையும் தண்டனையின்றி அனுப்பி வைத்தான். இதுபோன்று வாயினால் பிழைத்த கதைகளும் உள்ளன.

அதன்பின் மகன் செய்த தவற்றை சுட்டிக் காட்டி திருடுதல் தவறென்று சொல்லித் திருத்தினார் தந்தை. அதற்காக ரோஜா மலர்களைத் தின்றதை நியாயப் படுத்தாமல் காவலர்களை ஏமாற்றியதும் தவறுதான் என்றும் சொன்னார். காவலர்களைகேட்டிருந்தார்
கூட உனக்கு ஒன்றிரண்டு மலர்களை கொடுத்திருப்பார்கள். திருடியது தவறென்று சொல்லிக் கொடுத்தார்.

மாறாக பேச்சுத்திறனால் நடக்க முடியாதவற்றைகூட நம்புகிற மாதிரி சொல்வார்கள். நாம் கதைகளை கதைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்பக் கூடியவற்றை மட்டும் நம்ப வேண்டும். ஒரு மாற்றுத் திறனாளியால் ஆகாய விமானத்தை ஓட்ட முடியும் என்றால் நம்பலாம். அதற்காக ஒரு எருமை மாடு விமானத்தை ஓட்டும் என்றால் அதை யார் சொன்னாலும் கண்களை மூடிக் கொண்டு நம்பி விடக்கூடாது.

அதற்காக அவர்களிடம் எதிர்வாதம் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருந்தாலே போதும். ஆர்வம் காட்டக்கூடாது. ஆர்வம் காட்டினால்தான் ஒருவனுக்கு பத்து தலை இருந்தது இருபது  கைகள் இருந்தன என்று மேற்கொண்டு நம்பத்தகாதவற்றை நம்மிடம் சொல்வார்கள்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button