கதைகள்

பார்ப்பதற்கும் வாங்குவதற்கும்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பார்ப்பதற்கும் வாங்குவதற்கும்!

படிக்கும் காலத்தில் மணிக்கூடு பெல்ற் போன்றவற்றை வாங்குவதற்கு நண்பன் விஜயனை கூட்டிச் செல்வோம்.

பல கடைகள் கூட்டிச் செல்வான். ஏறி இறங்கி சலித்துப் போவோம்.

“ஏன் மச்சான்… இந்தக் கடையிலை மலிவாக நல்லது இருக்கே! வாங்குவமா?”

“இதெல்லாம் சும்மா பாக்கிற கடை. வாங்கிறதுக்கெண்டு ஒரு கடை இருக்கு. வாருங்கள் அங்கு போவம்” என்பான் விஜயன்.

அப்படித்தான் அவனின் திருமணமும் நடந்தது.

நன்றி : வெற்றிமணி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *