நேசம் நாடும் நெஞ்சங்கள்

வெளி மாவட்ட மாணவர்களுக்கு உதவிய தியாகி!

யாழ். பல்கலைக்கழக வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர்  வாமதேவன் தியாகேந்திரன்.

கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்கு போக முடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்கு செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

அதாவது மட்டக்களப்பு மலையக மாணவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்கு போக முடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.

அப்போது அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்தார்.

மேலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு தங்கள் இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்ததும் பயணத்துக்கான செலவையும் இவரே ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிதியத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியது மட்டுமல்ல கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு இதுவரை ஒரு கோடி ரூபாவையும் வழங்கியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *