கவிதைகள்
கொரோனாவும் மனமாற்றமும்!… சங்கர சுப்பிரமணியன்.

கொரோனா வந்தாலும் வந்தது
பல மனமாற்றங்களை தந்தது
பல காலங்களாய் மாறாத மாற்றங்கள்![]()
சட்டென மாறியதிங்கு உண்மையே
தூணிலும் துரும்பிலும் அவனில்லை
அங்குதான் நிரந்தரம்
என்றில்லை
மனித உள்ளத்திலும் அவன் இருக்கிறான்
நம் இல்லத்திலும் அவன் இருக்கின்றான்
சாதி சொல்லி பிரிக்கும் மனிதர்க்கு
சாட்டையடி என்று வேறும் வேண்டுமோ
துப்புறவு தொழிலாளர் காலைத் தொட்டு வணங்கியே
பூக்களை அவர்கள்
பாதங்களில் போட்டனர்
உயிருக்கு தீங்கென ஒன்றிங்கு வந்திட்டால்
மனிதன் உண்மை நிலைதன்னை உணர்கிறான்
காக்கும் கடவுள் யாரென்று கேட்டாலே
மருத்துவரும் செவிலியரும் என்றே மாறாது சொல்கிறான்
காக்கும் கடவுள் என்று சொல்லியே வாழ்ந்தவன்
இங்கு கொரோனாவால் பலர்
அழிந்த போதிலும்
காக்க அவன் வரவில்லை என்றறிந்தும்
ஆபத்தில் நம்மை காப்பவரே கடவுள் என்றறிகிறான்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()