Featureநேசம் நாடும் நெஞ்சங்கள்

தாயக மக்களுக்கான உதவி – மட்டக்களப்பு (2)

போரினால் பாதிக்கப்பட்டு சிறுக சிறுக தமது வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த முயன்ற மக்களுக்கு, தற்போதைய கொறானா வைரஸ் நெருக்கடி நிலையை சமாளிக்க ஓரளவேனும் எமது உதவிகள் அவசியமாக இருக்கின்றது.

எனவே தற்போதைய இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, தாயகத்தில் வாழும் மக்களுக்கான அவசிய அவசர உதவிகள், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்குபடுத்தலில், அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஒழுங்குசெய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வுதவித்திட்டத்தின் ஒருபகுதியாக, சிட்னி வாழ் உறவுகளின் பங்களிப்பின் ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கித்துள் கிராமத்தில் 30 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவு பொதிகள், இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வுதவிதிட்டம் 16-04-2020 வியாழக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வுதவித்திட்டத்திற்காக பங்களித்த சிட்னி வாழ் தமிழ் உறவுகளுக்கு நன்றிகள்/

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *