கவிதைகள்
கரோனாவும் சூழலும்!…. சங்கர சுப்பிரமணியன்.

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து ![]()
கடற்கரையில் இன்று யாருமில்ல
காற்று வாங்க அங்கு ஆளுமில்ல
கொரோனா நம்மை வரவேற்க
ஆவலோடு அங்கே நிற்குதோ
அதைப் பார்த்த அரசாங்கமும்
போகாது தடைவிதித்ததோ
பூங்காவும் மனிதரின்றி தனியானதோ
பூக்களெலாம் பொலிவின்றிதான் போனதோ
மரமெல்லாம் நிழல் கொடுத்தும் ஆளில்லையோ
மறைவாக காதலரும் அங்கில்லையோ
திரையரங்கும் திண்டாடிதான் போனதோ
அதை தேடிவரும் மக்களின்றி வெறிச்சோடுதோ
உணவகங்கள் களையிழந்தங்கு
நிற்குமோ
அதைக்காண மனமின்றி பூட்டும் தொங்குமோ
தெருக்களெலாம் ஆளின்று இங்கு தோன்றுதோ
அதில் வாகனங்கள் ஓட்டமின்றி
எங்கு போனதோ
கொரோனாவும் ஓடிவிடும் நம்மை விட்டு
முரணாக எண்ண வேண்டாம்
எல்லாம் நலமாகுமே!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()