பெரியநீலாவணை சுனாமி தொடர்மாடிக்குடியிருப்பு மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஊரடங்குச்சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக்கூலி குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அரசாங்கம் முன்னெடுக்கும் மக்கள் நலப்பணிகளுக்கு மேலதிகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைய கல்முனை வடக்கிலுள்ள பல்வேறு தமிழ்கிராமங்களுக்கும் மனிதாபிமான நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
![]()
இதற்கமைய பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் விடுத்தவேண்டுகோளுக்கமைய இலண்டன் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்திச்சங்கம் ஊரடங்குச்சட்டத்தினால் அன்றாடத் தொழில்களை இழந்துள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைத்துள்ளது. 4 இலட்சத்து 74 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்ட்ட இவ் உலர் உணவுப்பொருட்கள் பெரியநீலாவணையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் இஸ்லாமிய ரிலீப் வீட்டுத்திட்டத்திலுள்ள 474 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்.
![]()
![]()