நேசம் நாடும் நெஞ்சங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு கொடுப்பனவு வழங்கிவைப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தமிழ்க்கிராமங்களில் சமுர்த்திக்காத்திருப்பு பட்டியலிலுள்ள  குடும்பங்களுக்கான 5000 ரூபா மானியக் கொடுப்பனவை  இன்று(10) பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வீடு வீடாகச் சென்று வழங்கிவைத்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பரிவில் சமுர்த்தி காத்திருப்பு பட்டியலில் 697 பேர் உள்ளனர். இவர்களுக்கான கொடுப்பனவே இன்று வழங்கிவைக்கப்பட்டது. இதில் சமுர்த்தி தலைமைத்துவப்பணிப்பாளர் கே.இதயராஜா, சமுர்த்தி முகாமைத்துவபணிப்பாளர் ஏ.எல்.எம்.நஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் ஏற்கனவே சமுர்த்தி உதவி பெறும் 5108 குடும்பங்களுக்கு முதல்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கிவைக்கப்ட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *