சதந்திரத்தின் பெறுமதியை இலண்டன் மகாராணியார் குடும்பத்திலிருந்து விலகிச் சென்று தனக்கான தனது மனைவிக்கான ஒரு வேலையைப் பெற்று உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற முடிவை எடுத்த இளவரசர் Hary மேகனின் முடிவை மகாராணி குடும்பத்தினர் அதிர்ச்சியுடன் பார்த்தாலும் உலகம் அவர்களின் முடிவைப் பாராட்டி மகிழ்கிறது.
இன்றைய உலகில் தான் எத்தகையவன் தான் என்னதான் இளவரசனாக இருந்தாலும் தானும் மனிதனே என்ற பண்பு Prince Hary ஐ இந்த முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது என நம்பலாம்.
அவரைப் பற்றிய செய்திகளில் “ஊடகங்கள் நாங்கள் போகுமிடமெல்லாம் வந்து எம்மைப்பற்றி செய்திகளை வெளியிடுகிறார்கள்.இது எமக்கு விருப்பமில்லாத விடயம்.எங்களைச் செய்திப் பொருளாக்குவதை நாங்கள் விரும்பவில்லை” என கவலைப்பட்டிருக்கிறார்கள்.
அரச வாழ்வு என்பது மிகவும் கட்டுப்பாடுடையது.சாதாரண மனிதனின் வாழ்வைவிட மேன்மைநிலை கொண்டதாக இருக்க வேண்டுமென்பதற்காக சில கட்டுப்பாடுகள் அனைத்து நாடுகளும் நாடாளுமன்ற அரசுக்கு மாறினாலும் பழைய மன்னர் பரம்பரையைப் போற்றுவதும் அவர்களைத் தனித்துவமாக வைத்திருப்பதும் நடைபெற்றுத்தான் வருகின்றது.
இன்ன நேரம் தூங்க வேண்டும் இன்ன சாப்பாடு சாப்பிட வேண்டும் இன்ன உடைதான் உடுக்க வேண்டும் பொதுமக்களுடன் வரையறைக்குட்பட்ட வார்தைப் பிரயோகங்களுடன் உரையாட வேண்டும் என்ற பொதுக்கட்டுப்பாடு இருக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் சதந்திரத்தையே விரும்புகிறேன்.எமக்குள் நாமே பண்பாடு என்ற ஒன்றினை வகுத்துக் கொண்டதனால் மனித மாண்பு பழுதடையாத சுதந்திரத்தை அனுபவிக்க முயற்சிக்கிறேன்.
இது சாதாரண மனிதர்களுக்கு உகந்ததாகவும் அதனை அனுபவிக்கக்கூடிளதாகவும் .இருக்கின்றது.
ஆனால் அரச பரம்பரையிலுள்ளவர்கள் இதற்கப்பாலும் கொஞ்சம் கட்டுப்பாட்டுடனேயே நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டு.
ஊடகங்கள்தான் தனது தாயாரைப்பற்றிய தவறான செய்திகளை வெளியிட்டு மரணத்தை ஏற்படுத்தியனார்கள் என இளவரசர் Harry சொல்லியதாக செய்திகள் உண்டு.
தனது மனைவியின் சுதந்திரமும் அவரின் விருப்பமும் மிகவும் முக்கியம் என்பதும் அவரின் முடிவுக்குக் காரணமாகும்.
மகாராணியார் அவர்கள் மாறிவரும் இளந்தலைமுறை உலகு அரச அடையாளத்திற்கு அப்பால் சிந்திக்கிறது என்பதை உணர்ந்து தனது பேரனின் முடிவை மதித்திருப்பது மகாராணியார் அவர்கள் மீது இன்னும் மதிப்பு உயர வழிவகுத்துள்ளது.
சுதந்திரம் என்பது பிராணவாயுவைப் போன்றது.