இரவு 11 மணிக்கு படம் ஆரம்பமாகியிருக்கிறது. அவர் படம் ஓடிக் கொண்டிருக்கின்ற போதே, நித்திரை கொண்டு விட்டார். கொஞ்சம் கீழே சரிந்தபடி நித்திரை கொண்டவரை யாருமே கவனிக்கவில்லை. எல்லோரும் போய் விட்டார்கள். படம் முடிந்து, தியேட்டரை சுத்தப்படுத்த வந்தவர்கள் கூட அவரைக் கவனிக்கவில்லை.
காலை 5 மணிக்கு திடுக்கிட்டு எழும்பியவர், தன்னை தியேட்டருக்குள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு போனதை உணர்ந்திருக்கிறார். யாரும் இல்லாத ஒரு இருட்டான தியேட்டருக்குள் தனியே மாட்டிக் கொண்டால் எப்படி இருக்கும்? உடனேயே பொலிஸ் தொடக்கம் தீயணைப்புத்துறை வரை எல்லோரையும் அவசர இலக்கத்தில் தொடர்பு கொண்டு தன்னுடைய நிலையை சொல்லி உதவி கோரியிருக்கிறார். எல்லோரும் வந்து தியேட்டர் நிர்வாகத்தினரை அழைத்து, அவரை திறந்து விட்டிருக்கிறார்கள்.
அவர் களைப்பினால் நித்திரை கொண்டாரா அல்லது தர்பார் படம் தந்த அலுப்பினால் நித்திரை கொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை.
இது எப்படி!!!
Mahenthiran Sivappiragasam