கவிதைகள்
வயது சமத்துவத்தின் பயணம்
பிறத்தலின் பால் பேரின்பம்
காணுமொரு உருண்டை பந்து.
வாழ்தலின் பால்
எதிர்பார்ப்பை சுமக்குமொரு பசுமை வெளி
இரண்டுடன் ஒன்றை கழிக்குமொரு
சமுதாய உண்ணிகள்
எவுகனையின் நுனிநாக்கில்
மலரோடு விசம் தடவும் ஆறறிவுகள்
உலவும் தேசமிது தோழா.!
மாத்திரை விழுங்கிகளை உண்டு
பூப்பெய்தலை தடுக்குமிந்த
கண்ணாடி உலகில்
வா நண்பி நாம் தேசம் வெல்வோம்.
என் நலனில் நீயுமாய்
உன் துன்பத்தில் நானுமாய்
அலைபாயும் பேரின்ப கடலில்
வா நண்பா நீந்தி மகிழ்வோம்..!
ஜனனத்தின் முத்தங்களையும்
வதனத்தின் ஏக்கங்களையும்
மொழிபெயர்க்குமிந்த சித்தாந்தத்தில்
கழிவிரக்கங்களை மூட்டையாய்
சுமந்தலையும் சந்தேக விரட்டிகளை
புடமிட்டு வேரறுப்போம் வா தோழி வா..!
ஆணென்றும் பெண்ணென்றும்
பிரித்து பேசும் இத்தேசத்தின்
நிழல்விழுங்கி சிந்தனைகளை
கொழுத்திடுவோம் வா நட்பே வா..!
-நெடுந்தீவு தனு