காயங்களில் இருந்து… !
நீங்கள் கேட்ட அவதூறுகளை மறந்து விடுங்கள். அது உங்கள் நிம்மதியை அழித்துவிடும்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் வீண் அவதூறுகளை பரப்ப இது வாய்ப்பாகி விடும்.
உதவி செய்தவர்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு மறதி இல்லாத நன்றி கடனாளியாக இருங்கள்.
துயரத்தையும் வலியையும் தந்தவர்களை மன்னித்து விடுங்கள். ஆனால் அவர்களை திரும்ப நெருங்க அனுமதித்து விடாதீர்கள்.
பாராட்டையும் புகழையும் தலையில் வைத்து ஆடாதீர்கள். அதை இழக்கும் சந்தர்ப்பம் வரும்போது உங்கள் இதயம் உடைந்து விடும்.
அவமானப்பட்ட நேரங்களை நினைவில் வைத்திருக்காதீர்கள். இப்போது நீங்கள் இருக்கும் சந்தோசத்தையும் இழந்து விடுவீர்கள்.
ஏனோதானோவென்று வீணாய் நாட்களை கடத்தாதீர்கள். கூட இருப்பவர்களின் அன்பை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களோடு நேரம் செலவிடுங்கள்.
தழும்புகளை தடவிப் பார்த்து பழி வாங்காதீர்கள்.
காயங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
கோபத்தை கட்டுப்படுத்துங்கள். ஆனால் தன்மானம் போய்விடும் என்றால் பொங்கி எழுங்கள்.
– நெடுந்தீவு முகிலன்