டிக்வா உன் சுவடுகள்… கவிதை… தவமணிதேவி

ஓராண்டு கடந்தாலும்
டிக்வா -உன்
சரிவுகள் எம்மை விட்டு செல்லவில்லை!
மனதில் பயம் இன்னும் நீங்கவில்லை!
மழைத்துளிகளை
கொண்டு
மலைகளை
சரிக்கும்
வல்லமை பெற்ற
உன் பாதச் சுவடுகள்
மீண்டும் ஒரு முறை
வேண்டாமே!
இயற்கைக்கும் உணர்வுகள் உண்டு
உயிரோட்டம் உண்டு
இதை உணர்பவர்
மட்டுமே மனிதர்
என்பதை
எம்மவர் மத்தியில்
உணர்த்தி விட்டாயோ!
வானை இரண்டென பிழந்த இடியும்
மரங்களை சாய்த்த
புயலும்
மலை நடுவே
சுனாமியாய்
வந்த வெள்ளமும்
மனித உயிரை
சிறிதாய்
நினைத்ததும் ஏனோ!
வீசும் தென்றலும்
சீற்றம் கொள்ளும்
இயற்கையே
உன்னை சீண்டினால்
நிமிர்ந்த மலையும்
நிலத்தில் சரியும்
நில நடுக்கம் எனும்
தாண்டவத்தால் – உன்
கோரத்தின் உச்சத்தினால்
மண்ணுள் புதைந்தது மனித
உடல் அல்ல
உயிர்கள்
என்பதை
யாரறிவார்!
கடல் அலையென
புரண்டது
மழைநீர் மட்டுமல்ல
விழிநீரும் தான்
கடவுளை வணங்கி உறங்க சென்றோர்
கண் விழிக்கவில்லை
விதி என்பது
இது தானா?
![]()