உலகம்

நைஜீரியாவில் மர்மக் கும்பல் அட்டகாசம் – 17 பேர் பலி

நைஜீரியாவின் பிளாட்டோ மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய மர்மக் கும்பல் ஒன்று கிராமவாசிகளை கொலை செய்துள்ளது.

அவ் மாநிலத்தின் காவல்துறை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 17 கிராமவாசிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் ஏற்கனவே கடந்த புதன்கிழமை டஃபிகானா கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் வருகை தந்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள பிளாட்டோ மாநிலம், நிலம், மேய்ச்சல் உரிமைகள் மற்றும் வளங்கள் தொடர்பான தகராறுகளால் நீண்ட காலமாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *