உலகம்

உலகை மிரள வைத்த ரஷ்ய ஜனாதிபதி ; அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அறிமுகம்

கிரெம்ளின் வெளியிட்ட காணொளி காட்சிகளின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நேற்று (வெள்ளிகிழமை) ஒரு புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகப்படுத்தினார். மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா தனது கடற்படையில் மேலும் ஐந்து கப்பல்களை சேர்க்கும் என்றும் அவர் கூறினார்.

வடமேற்கு நகரமான செவரோட்வின்ஸ்கில் உள்ள செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில், பெர்ம் நீர்மூழ்கி கப்பலில் நடைபெற்ற கொடியேற்றும் விழாவில் புதின் கலந்துகொண்டார்.

இவ்விழா, அக்கப்பல் கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதை குறித்தது. “உலகளாவிய தாக்கத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்ட இந்த வகையான சக்திவாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் திறன் கொண்ட உலகின் ஒரு சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும்,” என்று அவர் கூறினார்.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்பு அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். ஏனெனில், நீருக்கடியில் இரகசியமாக செயல்படும் அவற்றின் திறன், ஒரு தாக்குதல் நிகழும் பட்சத்தில் பதிலடி தாக்குதல் நடத்தும் ஆற்றலை உறுதி செய்கிறது.

2030-ஆம் ஆண்டுக்குள் கடற்படை மேலும் ஐந்து கப்பல்களைப் பெறும் என்றும், அவற்றில் மூன்று கப்பல்கள் பெர்ம் கப்பலின் அதே வகையை சேர்ந்தவை என்றும் புதின் கூறினார்.

பல்வேறு வகையான கிரூஸ் ஏவுகணைகளை சுமந்துகொண்டு, இந்த நீர்மூழ்கி கப்பல்களால் “உலகின் எந்த பெருங்கடல் பகுதியிலும்” இயங்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *