பலதும் பத்தும்

ஆசிய வல்லரசு தரவரிசையில் 3 ஆவது இடத்தை தக்க வைத்தது இந்தியா

ஆசியாவின் வல்லரசு நாடுகளுக்கான தரவரிசையில் இந்தியா 3 ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது. பொருளாதார வலிமையில் சிறிய சரிவு ஏற்பட்டபோதிலும், இந்தியா தனது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

லோவி நிறுவனம் (Lowy Institute) வெளியிட்ட 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய வலிமைக் குறியீட்டின்படி, அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனா 73.6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்தியா 40.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஜப்பான் 38.6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வலிமையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், அதன் ஒட்டுமொத்த வலிமை மதிப்பெண் 40.5 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச நாணய நிதியத்தின் கணக்கீட்டு முறை மாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவை பொருளாதார வலிமை மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், ஆசிய பிராந்தியத் தலைமைத்துவ மதிப்பீட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முதலிடத்தில் உள்ளார். மோடியின் தலைமைத்துவ மதிப்பீடு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது.

இந்தக் குறியீடு ஆசியாவின் 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களை பொருளாதார வலிமை, இராணுவ ஆற்றல், மீள்தன்மை, இராஜதந்திர செல்வாக்கு உள்ளிட்ட எட்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் 131 அளவீடுகளைக் கொண்டு மதிப்பிடுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *