இந்தியா

திருப்பரங்குன்றில் துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு

திருப்பரங்குன்றம் மலை மற்றம் அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநிதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தற்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கார்த்திகை தீபத்தினமான நாளைய தினம் தீபம் ஏற்றவும், இதற்கு தமிழக பொலிஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கமைய துப்பாக்கி ஏந்திய பொலிஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், 70இற்கும் மேற்பட்ட சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்வித  தகவலும் வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *