கதைகள்

ஆகாயப்பந்தல் … 17 …. ஏலையா க.முருகதாசன்

(தானும் தனது கணவனைக் காதலிச்சே கல்யாணம் செய்தவளாகையால் தனது மகளின் நடவடிக்கையானது தனது மகளும் காதலிக்கத் தொடங்கிவிட்டாளோ என்ற எண்ணத்துடன் இப்பொழுது சரவணன் வீட்டில் அவளின் சூழ்நிலை எவ்வாறு இருக்கும் என யோசித்தாள்.)
-சகுந்தலா

வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்கள்,அவர்கள் யாராவது வீட்டுக்கு விருந்தினராகப் போனால் அந்த வீட்டுக்காரர்களின் நிலவரத்தை இப்ப என்ன நடக்குமோ என அசை போடுவார்கள்.

தமக்கு ஒரு இளந்தாரி மகன் இருந்து அவன் தன்னோடு படிக்கும் சக மாணவியின் வீட்டுக்குப் போகும் நிலை தோன்றினால் பெற்றோர் முழுமனசோடு அனுப்பி வைப்பது போல வெளிக்காட்டிக் கொண்டாலும் கதையோடு கதையாக தனது மகனிடம் அவனின் வகுப்புச் சக மாணவியைப் பற்றியும்,அவளின் பெற்றோரைப் பற்றியும் ஏனோதானோ என்று விசாரிப்பது போல வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும்,தாய் தகப்பனின் மனதில் பல எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்கவே முடியாது.

அந்த மகனின் தாயும் தகப்பனும் காதலிச்;சுக் கல்யாணம் செய்தவர்களாயின் தனது மகனையும்,சக மாணவியின் வீட்டுக்கு விருந்தினனாகப் போகும் சூழ்நிலையையும் இணைச்சு மனசில் ததும்பி வழியும் கற்பனைகளை நிரப்பிக் கொண்டேயிருப்பார்கள்.

அப்படியாகுமா இப்படியாகுமா என்று தடுமாறி ; அவர்களின் மனம் அலைபாயும்.அவர்கள் எமக்கொத்தவர்களென்றால் என்ற கற்பனை அவர்களுக்கு மகிழ்ச்சியையும்,அப்படியில்லாமல் வேறையாட்களென்றால் பிள்ளைகள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் விட்டிட்டு பிடிச்ச முயலுக்கு மூன்றுகாலென்று நின்றால்,சொந்தங்களோடை மல்லுக்கட்ட வேண்டி வருமே என்று மனசைப் போட்டுக் குழப்புபவர்கள் தமிழர்களில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
சகுந்தலா என்னதான் உளவியல் படிப்ப படித்தவளாக இருந்தாலும்,உளவியல் சார்ந்த கருத்தரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் பங்குபற்றிய அனுபவமிருந்தாலும் பல்வேறுபட்ட மன இருக்கைகளைக் கொண்ட வெளித்தோற்றத்தில் இவர்கள் அப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பதைக் கண்டறிய முடியாது என்பதை,மனித உடலின் செயல்பாட்டுப் பிரதிபலிப்புகள் மனித நடத்தைகளாக வெளிவருகின்றன என்பதை அவள் உணர்ந்தவள்.

காம உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற ஊசலை,அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் உழல்வதையம் பல இடங்களில் சகுந்தலா சொல்லியிருந்தாலும் பல்வேறுபட்ட சிந்தனைக்குள அவள் உழன்று கொண்டிருந்த போதும்,இது சகஜந்தானே,மதுசாவின் வாழ்க்கையில் எது நடக்க இருக்குதோ அது விதியென்று அறுதல் கொள்ள வேண்டியதுதான் எனத் தன்னை அறுதல்படுத்தியவள் இஞ்சை ஒருக்கா வாங்கோ என்று கணவன் வேலானந்தனைக் கூப்பிடுகிறாள்.
என்ன என்பது போல புருவங்களை உயரத்தியபடியும் கண்களினால் மனைவியைக் குத்திட்டுப்; பார்த்தவாறு வேலானந்தன் அவள் முன்னால் வந்து நிற்க,எனக்கு ஒரே யோசனையானக இருக்கு மதுசா அவளோடு படிக்கிற சரவணன் கூப்பிட்டவன் என்று சொல்லி அவன் வீட்டுக்குப் போயிருக்கிறாள்,சரவணன் அவளைக் கூப்பிட வந்த போது பார்த்தன் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தான, ஆனால் அவனில் ஏதோவொரு வித்தியாசம் தெரியுது.நான் இஞ்சை எங்கடை சிற்றியிலை எங்கடை பொடியள் பலரைப் பார்த்திருக்கிறன்,இலங்கைப் பொடியளில் அவை எங்கடை பொடியள் என்ற ஒரு முகச் சாயல் இருக்கும் அது மாதிரி இந்தியாவிலிருந்து இங்கை இருக்கிற யூனிவேர்சிட்டியில் படிக்க வத்திருக்கின்ற பொடியளையும் பொம்பிளைப் பிள்ளைகளையும் பார்த்திருக்கிறன் அவை இந்தியாவைச்சேர்ந்தவை என்ற அவையின்ரை முகவெட்டிலும் தெரியும் அவையின்ரை கதையிலையிருந்தும் தெரிஞ்சிடும்.

ஆனால் மதுசாவைக் கூட்டிக் கொண்டு போகவென்று வந்த சரவணன் இங்கை வந்து நின்றது ஒரு ஐஞ்சுநிமிசம்கூட இல்லை.அந்த ஐஞ்சு நிமிசத்துக்குள்ளை சரவணனைப் பார்த்த போதுஅவர் இலங்கைப் பொடியனாயும் தெரியேலை,நான் இஞ்சை எங்கடை சிற்றியிலை படிக்கிற இந்தியப் பொடியங்களையும் பொம்பிளைப் பிள்ளையளையும் அங்கை இங்கையென்று காண்கிறனான் அனால் அவை போலையும் இல்லை, சரவணனின் கண் இமைகள் சரியான வித்தியாசமாக ஒரு சிங்கத்தின் பார்வை போல இருந்தது அதுதான் யாராக இருக்குமோ என்று யோசனையாக இருக்குது என்று சகுந்தலா சொல்ல,நீங்கள் சைக்கோலஜி படிச்சதால அதற்கூடாகத்தான் எல்லாத்தையும் பார்க்கிறியள் என்ற வேலானந்தன், சும்மா அதையும் இதையம் யோசிச்சு மனசைப் போட்டுக் குழப்பாமல் இருங்கோ,; மனிசற்றை நடவடிக்கைகளுக்குக் காரணம் உளவியல் பிரச்சினைதான் என்ற ஆய்வரங்குகளிலும் கருத்தரங்குகளிலம் லெக்சர் வைக்கிற நீங்கள் சிங்கத்தின் கண் அது இதுவென்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மனைவியை ஆறதல்படுத்ததி தைரியமாக்கவென்று கணவன் நினைச்சுச் சொல்ல,சைக்கோலஜி பட்டதாரி என்பது வேறை குடும்பம் என்பது வேறை எங்களுக்கு மதுசா ஒரெயொரு பிள்ளை,என்னைப் பார்க்கிறவையெல்லாம் என்ன இப்படி ஒரு அழகியைப் பெற்று வைச்சிருக்கிறாய் பிள்ளை சனிச்சிருக்கேக்கை ஏதாவது மந்திரம் கிந்திரம் உச்சரித்தனீங்களோ என்று கேட்கிறார்கள் என்கிறாள் சகுந்தலா.

என்னோடை யூனிவேர்சிற்றியில் படிச்ச கல்வியங்காட்டு வரலச்சுமி அது நடக்கேக்கை மனசை ஒருநிலைப்படுத்தி பிறக்கிற பிள்ளை அழகாயும் உடல்நலத்தோடும் கெட்டித்தனத்தோடும் பிறக்க வேண்டும் என்று நினைச்சுக் கொண்டு அதில் ஈடுபட வேண்டும் என்று பழைய ஆச்சிமார் ரகசியமாகச் சொல்கிறவை அது மாதிரி நீயம் உன்ரையவரும் நினைச்சியளா அதுதான்போல மதுசா இப்படி அழகாயிருக்கிறாள் கெட்டிக்காரியாகவும் இருக்கிறாள் என்று குறும்பாகக் கேட்டாள் என்று வெட்கத்துடன் சகுந்தலா சொல்ல வேணுமென்றே வேலானந்தன் எது நடக்கேக்கிலை என்று எதுவுமே தெரியாத அப்பாவி போல நடித்துக் கேட்க,ஓகோ எதுவுமே தெரியாதோ,ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காதவன் மாதிரி அதை நடத்தி,ஒரு மாதச் சனிச்சலோடு எவருக்குமே தெரியக்கூடாதென்று பயந்து கொண்டு,கல்யாண நாள் குறிச்சுவுடன் அம்மா விட்டுத்தூரம் வந்திட்டுதானே என்று கேட்க ஓமம்மா என்று நெஞ்சு நடுக்கத்தோடு அம்மாவுக்கு பொய் சொல்லி நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்,இப்ப இவர் கேட்கிறார் மூக்கைப் பிடிச்சால் வாய் ஆவென்னத் தெரியாத பச்சைக் கழந்தை மாதிரியும்,இந்தப் பூனை பால் குடிக்காத மாதிரியும் மிதிச்ச இடத்துப் பல்லும் சாகாத மனுசன் என்று ஊரார் நம்புகிற மாதிரி நடக்கிற உங்களைப் போல எதுவுமே தெரியாத மாதிரிக் கேட்காதையங்கோ,எனக்கெல்லோ தெரியும் உங்களைப்பற்றி,நான் ஒரு பிள்iயைப் பெத்துப் போட்டு வயிற்றிலை நெருப்போடை இருக்கிறன் என்று சகுந்தலா இல்லாத கற்பனைகளில் மனசை மூழ்கடிச்சு குழம்பிக் கொண்டிருந்தாள்.

அது நடந்தது என்று சொன்னியளே அந்தத் தருணத்தை என்னவென்று சொன்னால்தானே எனக்குப் புரியும்,அதையும் இதையும் இழுத்து முடிச்சுப் போட்டுக்; குழம்பாதையுங்கே,எங்கடை பிள்ளை என்னைப் போல உறுதியானவள் எந்தச் சூழலிலும் எந்தப் புயலிலும் அசைய மாட்டாள் என்று சொன்னதும்,அப்பாவைப் போல என்றதுதான் என்று சகுந்தலா சொல்லி முடிக்கமுந்தி வீட்டு அழைப்பு மணி அடிக்க யாரென்ற பாருங்கள் என்று சகுந்தலா சொல்ல வீட்டுக் கதவை நோக்கி விரைக்கிறார் வேலானந்தன்.
கதவைத் திறந்ததம் மகளுடன் வந்த மற்ற நால்வரையம் பார்த்து வாங்க வாங்க என்று முகமலர்ச்சியோடு வரவேற்றவர்,அடுப்படிப் பக்கம் திரும்பி இஞ்சருங்கோ பிள்ளையோடை யார் வந்திருக்கினம் என்று வந்து பாருங்கோவன் என்று மனைவி சகுந்தலாவைக் கூப்பிடுகிறார்.

குணவன் கூப்பிட்டதும,; கூடத்தின் கதவடிக்கு வந்து கொண்டிருந்த சகுந்தலா மதுசாவுடன் இன்னும் நாலு பேர் நிற்பதைக் கண்டதும்,இவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் சரவணனின் அம்மா அப்பாதான் என்பதை உறுதி செய்தவள் மற்ற ஆணும் பெண்ணும் யாராக இருக்கும் என யோசித்தவாறு கதவடிக்கு வந்து சேர்கிறாள் வாங்க வாங்க எனச் சகுந்தலாவும் அவர்களை வரவேறகறு வேலானந்தனும் சகுந்தலாவும் அவர்களை உட்காரச் சொல்கிறார்கள்.
எல்லாரும் உட்கார சரவணனின் தாயாரான சசிகலா மட்டும் உட்காராமல் கையிலிருந்த ஒரு அழகான பிளாஸ்ரிப் பெட்டியை சகுநதலாவிடம் கொடுப்பதற்காக நீட்டியவாறு இந்தாருங்கள் எனக் கொடுக்க என்ன இது என்பது போல சகுந்தலா பார்க்க இது வெண்டிக்காயில் செய்த அல்வா என்கிறாள் சசிகலா.வெண்டிக்காயிலா அது அல்வா செய்வதற்கு ஒத்து வருமா என வியப்புடன் சகுந்தலா கேட்க,எல்லாமே ஒத்துவரும் அந்தந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் ஒத்துவரும் என்ற சசிகலா உணவு மட்டுமல்ல உறவுகள்,திருமணங்கள் என எல்லாமே ஒத்துவரும் என அவள் சொல்ல சரவணனின் அம்மா ஏதோ காரணத்தோடுதான் இந்த வார்த்தைகளைச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட சகுந்தலா கடைக்கண்ணால் அர்த்தத்துடன் மகளைப் பார்த்துவிட்டு அதே அர்த்தப் பார்வையுடன் கணவனைப் பார்க்கிறாள்.

வெண்டிக்காய் அல்வா உள்ள அந்த பிளாஸ்ரிக் பெட்டியை வாங்கியுவுடன் சசிகலா இருக்கையில் உட்காருகிறாள்.

தன்னோடு வந்தவர்கள் யார் யாரென்பதை தாய்க்கும் தகப்பனுக்கும் சொல்லுவம் என்று மதுசா வாயைத்: திறக்க அந்தத் தருணத்தில் சசிகலாவே மகேந்திரராஜாவைக் காட்டி இவர் எனது கணவர் நான் யாரென்று இப்ப தெரிஞ்சிருக்குந்தானே என்றவள் இவர்கள் எங்கடை சொந்தக்காரர்கள் அவருக்குப் பெயர் தர்மசிங்கம் இவாவுக்குப்: பெயர் பூரணேஸ்வரி என்கிறாள் சசிகலா.
இவையும் இங்கை இந்தச் சிற்றியிலைதான் இருக்கிறவையா என வேலானந்தன் கேட்க இல்லை இல்லை இவை வூப்பெற்றாலில் இருக்கிறவை இண்டைக்கு வீட்டுக்கு வந்தவை,உங்களிட்டடைப் போறம் என்று சொன்னதும் தாங்களும் வாறம் எண்டினம் கூட்டிக் கொண்டு வந்தனாங்கள் என்று சசிகலா சொல்ல உங்களுக்கு சரவணன் மட்டுமா ஒரு பிள்ளை என்று சகுந்தலா கேட்க,ஒரு பொம்பிளைப்பிள்ளையும் இருக்கிறா அவாவுக்கப் பெயர் சாரிணி என்கிறாள் சசிகலா.

நாங்கள் நினைச்சம் சரவணன் மட்டுந்தான் ஒரு பிள்ளையென்று அதுதான் கேட்டனாங்கள் என்ற சகுந்தலா காலமை சரவணன் நின்றநிலையிலை மதுசாவைக் கூட்டிக் கொண்டு போயிட்டார்.இருந்து கோப்பி குடிச்சிட்டுப் போங்கள் என்று கேட்க இன்னொரு நாளைக்கு வந்து குடிக்கிறன் என்று போயிட்டார்.எனறு ;சகுந்தலா சொல்ல தன்னை மறந்து சரவணன் இங்கைதானே வரப்போகிறான் எனச் சசிகலா சொல்ல மகேந்திரராஜாவும் சகுந்தலாவும் வியப்புடன் சசிகலாவைப் பார்க்க,சசிகலாவுக்குப் பக்கத்திலிருந்த பூரணேஸ்வரி விரல்களால் சசிகலாவின் துடையைத் தொட்டு அமத்துகிறாள்.

அதைக் கவனிக்கிறாள் சகுந்தலா.பூரணேஸ்வரி தொட்டதன் அர்த்தத்தையும் சகுந்தலா பார்த்த பார்iயின் அர்த்தத்தையம் உணர்ந்த சசிகலா நான் சொன்னது என்னென்டால் மதுசாவும் சரவணனும் ஒன்றாகப் படிக்கிறவை அதாலை அடிக்கடி சந்திப்பினம் என்றதைத்தான் சொன்னனான் என்று பதட்டத்தை மறைத்து இயல்பாகச் சொல்வது போல சசிகலா சொல்கிறாள்.

ஆனால் உளவியல் படிப்புப் பட்டதாரியான சகுந்தலா இதில் எதோ இருக்குது என யோசித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக கதைப்பது போலக் கதைக்கிறாள்.

(தொடரும்….)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *