உட்பூசல் நிறைந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு ‘உட்பூசல் நிறைந்த கட்சி’ என இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கட்சியின் பல தரப்பினரைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பில் கருத்துக்களைக் கேட்டறிந்ததாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உட்பூசல்கள் நிலவும் அரசியல் கட்சி ஒன்றுக்கு வரவிருக்கும் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.
அத்தகைய கட்சி, தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சென்று அந்தப் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு உட்பூசல்களைத் தீர்த்துக்கொள்ளாத அரசியல் கட்சிகளுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பிலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
![]()