இந்தியா

இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோருக்கு கடவுச்சீட்டு – விசா விதிகளை தளர்த்தியது இந்தியா!

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட பல்வேறு தரப்பட்ட வெளிநாட்டினருக்கான கடவுச்சீட்டு மற்றும் விசா விதிகளில் இந்திய மத்திய அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) (திருத்த) உத்தரவு, 2026’ (The Immigration and Foreigners (Exemption) (Amendment) Order, 2026) வாயிலாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வருகை தந்து பதிவுசெய்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் கடுமையான கடவுச்சீட்டு விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

அத்துடன் கடவுச்சீட்டு ஆவணங்களில் சிக்கல் உள்ள இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்கும், தங்களது வதிவிட அனுமதி தொடர்பான நடைமுறைகளை எளிதாகப் பூர்த்தி செய்வதற்கும் இந்தத் தளர்வு வழிவகுக்கிறது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தல் காரணமாக 2024 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியா வந்த சிறுபான்மைச் சமூகத்தவர்களுக்கும், திபெத்திய அகதிகளுக்கும் இதேபோன்ற விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2009 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்கள், தேசிய அடையாள அட்டை (CNIC) இல்லாததால் கடவுச்சீட்டை புதுப்பிக்க முடியாவிட்டால், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *