மல்லாக்க விழுந்த ஆமையைக் போராடி காப்பாற்றிய சக ஆமை!

சீனாவில் மிருகக்காட்சி சாலை ஒன்றில், மல்லாக்கப் படுத்து எழுந்திருக்க முடியாமல் தவித்த ஆமைக்கு, மற்றொரு ஆமை உதவி செய்து காப்பாற்றிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் நான்ஜிங் நகரில் அமைந்துள்ள ஹாங்ஷான் வன மிருகக்காட்சி சாலையிலேயே குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
200-க்கும் மேற்பட்ட வகையான உயிரினங்கள் வாழும் இந்த மிருகக்காட்சி சாலையில், ஆமை ஒன்று தரையில் மல்லாக்க விழுந்து, மீண்டும் எழுந்திருக்க முடியாமல் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருந்தது.
இதைக் கவனித்த மற்றொரு ஆமை, மெதுவாக அருகில் சென்று, தனது தலையால் முட்டியும் தள்ளியும் அதனைத் திருப்பி நிற்க வைக்க முயன்று, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஆமை தனது முயற்சியில் வெற்றி பெற்று சக ஆமையை மீட்டது.
இந்தக் காட்சியைக் கண்ட பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விலங்குகள் தங்களுக்குள் இவ்வாறு உதவி செய்துகொள்வது இயல்பான ஒன்று என்றும், தேவைப்படும் நேரங்களில் மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் உதவுவார்கள் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சக உயிருக்கு உதவுவதற்கு இனம், மொழி, வேறுபாடு எதுவும் தடையில்லை என்பதை உணர்த்தும் இந்த அழகான காட்சி, நட்புக்கும் அன்புக்கும் எடுத்துக்காட்டாக சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளையும், லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகின்றது.
![]()