இலங்கை

தாஜுதீன், பிரகீத் எக்னலிகொடவைப் படுகொலை செய்த  ராஜபக்‌ஷக்கள் பெரும் கொலைகாரக் குடும்பம்

தாஜுதீன், பிரகீத் எக்னலிகொட கொலை சம்பவங்கள் மற்றும் போத்தல ஜயந்த, கீத்நொயார் மற்றும் உபாலி தென்னக்கோன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவங்களுடன் நாமல் ராஜபக்‌ஷவும், ராஜபக்‌ஷ குடும்பத்தினருமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான ஒழுங்குவிதிகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது சாந்த பத்தகுமார எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

ஒடுக்குமுறைகளை அரசாங்கம் கொண்டுவருகின்றது என்று நாமல் ராஜபக்‌ஷ உரையாற்றும் போது கூறியிருந்தார். ஆனால் யார் ஒடுக்குமுறைகளை கொண்டுவந்தது என்று நாங்கள் அவரிடம் கேட்கின்றோம். இப்போது பொலிஸ் இராச்சியம் தொடர்பில் கதைக்கின்றனர். அப்படியென்றால் தாஜுதீனை கொலை செய்தது யார்? அது அம்மாவும் மகனும் என்று முழு நாட்டுக்கும் தெரியும்.

அத்துடன் பிரகீத் எக்னலிகொடவை காணாமல் போகச் செய்து கொலை செய்தவர்கள் யார்? நாமலும் அவரின் சித்தப்பாவுமே ஆகும். அதேபோன்று போத்தல ஜயந்த மற்றும் கீத்நொயாரின் கை,கால்களை உடைத்து அவர்களைக் கொல்ல முயற்சித்தது யார்? நாமலும் சித்தப்பாவும் ஆகும். உபாலி தென்னக்கோனின் கை, கால்களை உடைத்து அவரை கொல்ல முயற்சித்தது யார்? நாமல், மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோதாபய ராஜபக்‌ஷ ஆகியோரே ஆகும்.

ரதுபஸ்வெல, கட்டுநாயக்கவில் துப்பாக்கி சூட்டை நடத்தி கொன்றவர்களும் நாமலும், மகிந்த ராஜபக்‌ஷவும் மற்றும் கோதாபய ராஜபக்‌ஷவுமே ஆகும்.இவர்கள் முழு நாட்டையும் கொள்ளையடித்தவர்கள். உயர்நீதிமன்றமே இது தொடர்பில் கூறியுள்ளது. இப்போது எரிபொருள், எரிவாயு வரிசை தொடர்பில் நாமல் கூறினார். அவ்வாறு எங்கே இருக்கின்றது. அது சிறையில் இருக்கின்றதா? 2022இற்கு முன்னர் இருந்த நிலைமையை பாருங்கள். அப்போது உலகில் எரிபொருள் நெருக்கடி இருக்கவில்லை. ஆனால் இங்கு எரிபொருள், எரிவாயு வரிசை ஏற்பட்டிருந்தது. அதனை பாருங்கள். இப்போது நாமல் பொய்க்காரராகியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *