கவிதைகள்
“தேவ தேவனே நீதான் துணையே” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
அகந்தை மிகுந்தால் அழிவு நிச்சயம்
ஆணவமும் இணைந்தால் அழிவோ அழிவு
பதட்டமும் பயமும் எங்கும் பரவுது
பாரினைக் காத்திடல் அனைவரின் கடனே
போதனை கேட்டிடப் பொறுமையும் இல்லை
பொங்கிடும் ஆத்திரம் பொங்கியே நிற்குது
அழித்திடும் எண்ணமே ஆட்டம் போடுது
அவனியைக் காத்திட அனைவரும் எழுவோம்
சட்டத் துறையோ சரியப் பார்க்குது
காவல் துறையோ காணா இருக்குது
நீதி பதிகளோ குனிந்தே இருக்கிறார்
யார்தான் வருவார் காத்து ரட்சித்திட
சூதும் வாதும் சுழன்று ஆடுது
தூய்மை வாய்மை தளர்ந்தே போகுது
நீதி நேர்மை ஒதுங்கியே நிற்குது
தேவ தேவனே நீதான் துணையே !
![]()