இலங்கை

பிக்குகளின் சூனியத்தால் அநுரவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – சதிக்காரர்களின் மற்றுமொரு சூழ்ச்சி அம்பலம்

இலங்கையின் சமகால அரசியலில் எதிர்க்கட்சி உட்பட பல்வேறு தரப்பினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் பௌத்த துறவிகள் மூலம் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் கொடுத்து, அவரை நிலைகுலைய செய்ய சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த ஒரு வார காலமாக விகாராமஹாதேவி பூங்காவில் தொடர் போராட்டங்களில் பிக்குகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிரான சதித்திட்டங்கள்

ஆனாலும் பௌத்த துறவிகளின் அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் அடிபணிய போவதில்லை என ஜனாதிபதி அநுர திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷத்தின் கீழ், அரசுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

கோடிக்கணக்கான மக்களின் கையொப்பத்துடன் மனு கையளித்தாலும் ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படமாட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுரவுக்கு ஆபத்து ஏற்பட வேண்டும் என்று மாந்திரீக முறையில் கீழ் சூனியம் வைக்கும் செயற்பாட்டில் பிக்குகள் ஈடுபட்டிருந்தனர்.

தமது கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாத நிலையில், பிசாசுகளின் அச்சுறுத்தல் மூலம் அநுரவை தமக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பிக்கு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் உடல் நிலை

எனினும் இதற்கும் அடிபணியாத அநுரவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், தமது சூனியத்தால் அநுரவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

பிக்குகளின் சூனியத்தால் அநுரவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - சதிக்காரர்களின் மற்றுமொரு சூழ்ச்சி அம்பலம் | Anura In New Risk Pressures From Monks

இந்தத் தகவல்கள் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் உடல் நிலை தொடர்பில் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தகைய போலியான தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *