உலகம்

நாடுகடத்தப்படுவோம் என அஞ்சி மருத்துவரைப் பார்க்கச் செல்லாத கனேடிய பெண் மரணம்

அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கனேடிய பெண்ணொருவர், அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துவிடுவார்கள் என பயந்து மருத்துவரைப் பார்க்கச் செல்லாததால் மரணமடைந்துள்ளார்.

கனேடியரான பெய்ஜ் ஆடம்சன் (Paige Adamson, 61), அமெரிக்காவில், இக்கட்டான ஒரு இடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.

பிரித்தானியாவின் ஒரு பகுதியான வட அயர்லாந்தும் அயர்லாந்துக் குடியரசும் எப்படி ஒரு கோட்டால் பிரிக்கப்பட்டுள்ளனவோ, அதேபோன்றதொரு இடத்தில் வாழ்ந்துவந்துள்ளார் ஆடம்சன்.

அவர் வாழும் இடத்தை உலக வரைபடத்தில் பார்த்தால், அவரது இக்கட்டான நிலைமை தெளிவாகப் புரியும். கனடாவையும் அமெரிக்காவையும் ஒரு கோடு பிரிக்கும் நிலையில், ஆடம்சன் வாழும் பாய்ண்ட் ராபர்ட்ஸ் என்னும் இடம் மட்டும் கோட்டுக்கு இந்தப்பக்கம், அதாவது, அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ளது.

நாடுகடத்தப்படுவோம் என அஞ்சி மருத்துவரைப் பார்க்கச் செல்லாத கனேடிய பெண் மரணம் | Canada Women Dies In Us Refuse To See Doctor

விடயம் என்னவென்றால், பாய்ண்ட் ராபர்ட்ஸ் என்னும் இடத்தில் வாழும் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால், அல்லது விபத்து ஏதாவது ஏற்பட்டால், அவர்கள் அமெரிக்காவின் மற்ற பகுதிகளுக்கு செல்வது கடினம். அதைவிட, கனடாவுக்குச் செல்வது எளிது.

இந்நிலையில், ஆடம்சன் கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட, அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தோழியான அன்னெல் நார்மன் அவரைச் சென்று பார்க்கும்போது வலியில் துடித்துக்கொண்டிருந்திருக்கிறார் ஆடம்சன்.

ஆகவே, அவசர உதவியை அழைக்கலாம் என்று நார்மன் கூற, வேண்டாம், வேண்டாம் என பதறியுள்ளார் ஆடம்சன்.

ஆடம்சனின் பதற்றத்துக்குக் காரணம் என்னவென்றால், சென்ற மாதம் கனடா சென்றுவிட்டு அமெரிக்கா திரும்பிய ஆடம்சனை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து, அவர் அமெரிக்கத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளார்கள்.

அமெரிக்க நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளார் ஆடம்சன்.

ஆனாலும், அவரை நாடுகடத்துவது தொடர்பில் வழக்கொன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட, அடுத்த மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, சியாட்டிலில் புலம்பெயர்தல் நீதிபதி முன் ஆஜராக இருந்தார் ஆடம்சன்.

இப்படிப்பட்ட சூழலில்தான் கீழே விழுந்த ஆடம்சனுக்கு பலத்த அடிபட்டுவிட்டது.

நாடுகடத்தப்படுவோம் என அஞ்சி மருத்துவரைப் பார்க்கச் செல்லாத கனேடிய பெண் மரணம் | Canada Women Dies In Us Refuse To See Doctor

ஆக, மருத்துவரைப் பார்க்க கனடாவுக்குச் சென்றால், வீடு திரும்பும்போது மீண்டும் அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அதிகாரிகள் கைது செய்துவிடுவார்கள் என பயந்தே மருத்துவரைப் பார்க்கச் செல்ல மறுத்துள்ளார் ஆடம்சன்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் ஆடம்சன்!

ஆடம்சனின் மரணம், அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *