பலதும் பத்தும்

ஈரான் சிறையில் டொனால்ட் ட்ரம்ப்; உறங்குவது போன்ற காட்சிகள்

ஈரான் தலைநகர் தெஹ்ரானில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவிய போரின்போது, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதுடன், பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நேரடித் தாக்குதல்கள் இடம்பெறாத போதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நீடித்து வருகிறது.

ட்ரம்பைப் போன்ற முகமூடியும் சிகை அலங்காரமும் அணிந்த ஒருவர்
இந்நிலையில், தெஹ்ரானின் தஜ்ரிஷ் சதுக்கத்தில் சிறைச்சாலையைப் போன்ற கூண்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் ட்ரம்பைப் போன்ற முகமூடியும் சிகை அலங்காரமும் அணிந்த ஒருவர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

கூண்டினுள் படுக்கை, கழிப்பறை மற்றும் கைகழுவும் தொட்டி உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரம்பைப் போன்ற தோற்றமுடைய அந்த நபர், கூண்டின் கம்பிகளுக்கு அருகில் நிற்பதும் பின்னர் படுத்து உறங்குவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள் தங்களது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும், கூண்டின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள மின்னணு விளம்பரத் திரையில், தெற்கு ஈரானில் திருமண நிகழ்வொன்றின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான படங்கள் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *