இலங்கை

ஈரானிய பிரஜைகள் சிலர் காலி துறைமுகத்திற்கு பிரவேசித்தமை தொடர்பில் பிரதியமைச்சர் விளக்கம்

ஈரானியக் கப்பலொன்றில் இருந்த சிலர் காலி துறைமுகத்திற்கு வருகை தந்தது தொடர்பாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி  கருத்துத் தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், சிலர் கடல் வழியாக வருகை தரும் போது அரசாங்கம் பின்பற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் காணப்படுவதாகவும், அதற்கு அமைவாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேசச் சட்டங்கள் மற்றும் சர்வதேச அகதிகள் தொடர்பான உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்கள் காணப்படுவதாகவும், அந்தச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த உடன்படிக்கைகளுக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் எந்தவொரு நாட்டிற்கும் பிரச்சினை ஏற்படாது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், இதுவரை குறித்த உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி,

“இலங்கைக்கு ஒரு கப்பல் அல்லது கடல் வழியாக ஏதேனும் ஒரு குழுவினர் வரும்போது நாங்கள் பின்பற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேசச் சட்டங்கள் உள்ளன. அதேபோல் சர்வதேச அகதிகள் தொடர்பான உடன்படிக்கைகளும் உள்ளன. இந்த உடன்படிக்கைகள் மற்றும் சட்டங்களின் படியே நாங்கள் பணியாற்றுகிறோம். எனவே வருகை தருபவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களின் இனம் என்ன என்பது எங்களுக்கு முக்கியமல்ல; நாங்கள் சர்வதேச உடன்படிக்கைகளின் படியே செயற்படுகிறோம். அதனால் எங்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படாது. எந்தவொரு நாட்டிற்கும் இது பிரச்சினையாக அமையாது. இதுவரை நாங்கள் சர்வதேச உடன்படிக்கைகளின் படியே செயற்பட்டுள்ளோம்” எனக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *