சிறையிலிருந்து கட்சியை வழிநடத்தும் நாமல் ராஜபக்ச

நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் கட்சியை வழிநடத்துவதற்குரிய ஆலோசனைகளை அவர் வழங்கிவருகின்றார். எனவே, எமது கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ந்துவிட்டது, ஏற்பாட்டு சக்தியை இழந்துவிட்டது என சில கட்சிகளும், நபர்களும் நினைக்கலாம்.
நாமல் ராஜபக்ச சிறையில் இருந்தாலும் தேவையான ஆலோசனை, வழிகாட்டல்களை கட்சியின் செயலாளர் உட்பட அனைவருக்கும் வழங்குகின்றார்.
தொகுதி மட்டத்தில் அடுத்த வாரம் முதல் நடைபெறும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ச பங்கேற்காவிட்டாலும் எமது கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள். எனவே, நாமலை சிறையில் அடைத்தால் கட்சி வீழ்ந்துவிடும் என எவரும் நினைக்ககூடாது.” என்றார் சாந்த பண்டார.
![]()