உலகம்

கிரீஸில் கல்வி நிதியை அதிகரிக்கக் கோரி 10,000 பேர் போராட்டம்

கல்விக்கான அரச நிதியை அதிகரித்தல், பாடசாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிரீஸில் சுமார் 10,000 மாணவர்களும் ஆசிரியர்களும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் ஏதென்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில், இலவசப் பொதுக் கல்வியை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகள், வீட்டு வாடகை மற்றும் எரிசக்திக் கட்டணங்கள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் போராட்டத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

ஊதிய உயர்வு மற்றும் பணியாளர் பற்றாக்குறைக்கு எதிராக ஆசிரியர்கள், மருத்துவர்கள் சிலர் பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டதால், அரச பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து வருவதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், மாணவர் விடுதிகள் அமைத்தல் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக 733 மில்லியன் யூரோக்களுக்கு அதிகமான நிதியில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் மற்றும் அல்பேனியாவிலும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல் குறித்த அதிருப்தி ஆகியவற்றை முன்வைத்து அண்மையில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *