உலகம்

எல்நினோ தாக்கம் – இங்கிலாந்தில் கடும் குளிரான வானிலைக்கு வாய்ப்பு

எல்நினோ தாக்கத்தின் காரணமாக இங்கிலாந்து உட்பட வடமேற்கு ஐரோப்பா முழுவதும் அதிக ஈரப்பதம் மற்றும் புயல் போன்ற வானிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு தசாப்தங்களில் இந்த ஆண்டில் நிலவிய எல்நினோ மிகவும் வலிமையானதாகப் பதிவாகியிருக்கலாம் என்று ஐ.நா. வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வெப்பமண்டல பசிபிக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதனை அளவை எட்டும் என்று உலக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென் அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் இந்தோனேசியாவில் மோசமடைந்த காட்டுத்தீ உட்பட, இதன் கடுமையான பாதிப்புகள் ஏற்கனவே உலகளவில் உணரப்பட்டு வருகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எல் நினோ துருவச் சுழலை பலவீனப்படுத்துவதன் மூலம் இங்கிலாந்தில் கடும் குளிர் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *