உலகம்

ரணிலின் பொருளாதார ஆலோசகரிடம் ஆலோசனை பெறும் அநுர!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகச் செயற்பட்ட துமிந்த ஹுலங்கமுவவிடமே, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும ஆலோசனை பெற்று வருகிறார் என எதிர்க்கட்சி நாடாளுளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கிண்டலாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்கவின் ‘பொருளாதார நிபுணராக ஆக இருந்த துமிந்த ஹுலங்கமுவதான், இப்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ‘பொருளாதார நிபுணராகவும் பணியாற்றுகின்றார் என தெரிவித்துள்ளார்.

துமிந்த ஹுலங்கமுவவின் ஆலோசனையின் பேரிலேயே ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசாங்கத்தில் உள்ளவர்கள் அதே பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்” எனபது வேடிக்கயைானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய திறமையான நபர்கள் எதிர்க்கட்சியிலும் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கத்தில் உள்ள சிலர் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மேம்படுத்தக் கூடிய திறமையானவர்கள் எதிர்க்கட்சியிலும் உள்ளனர் எனவும் தமக்கு நேர் எதிரான அவ்வாறானவர்கள் இருக்கின்றார்கள் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறிய கருத்தை, ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

சுனில் உரையாற்றும் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தம்மையே அவர் சுட்டிக்காட்டினார் என ஹர்ஷ டி சில்வா நகைச் சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *