உலகம்

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, நபர் ஒருவர் தனது காரால் மோதியதுடன், மீண்டும் காரைப் பின்னோக்கிச் செலுத்தி இரண்டாவது முறையாகவும் அவர் மீது மோதியதில், அந்த உறுப்பினரின் கால் அகற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களும் அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெல்போர்னுக்கு வடக்கே உள்ள வாங்காராட்டா எனும் சிறிய கிராமப்புற நகரத்தில் திங்கள்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பின்னர், சுயேச்சை வேட்பாளரான ஹெலன் ஹெய்ன்ஸ் நேற்று இரவு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவரவில்லை.

இருப்பினும், அவுஸ்திரேலியப் பிரதமர் இதனை அந்நாட்டில் நிலவும் மோசமான, துருவமுனைப்பு கொண்ட அரசியல் விவாதச் சூழலுடன் தொடர்புபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸை படுகாயப்படுத்திய தாக்குதல் தொடர்பாக 43 வயதான நபர் மீது விக்டோரியா காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

பிரெண்டன் நியூஜென்ட் மீது, கடுமையான காயத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது, வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியது மற்றும் ஒரு பொது அதிகாரிக்குத் தீங்கு விளைவித்த காமன்வெல்த் குற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *