உலகம்

190 குழந்தைகளை கொன்ற கொடூரன்: மதபோதகர் பால் மெக்கன்சி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு

கென்யாவில் 190 குழந்தைகளை கொன்ற மதபோதகர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கடந்த 2023ம் ஆண்டு கென்யாவின் அடர்ந்த ஷாகாஹோலா காட்டுப் பகுதியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவத்தில் குட்நியூஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பின் தலைவரும் மத போதகருமான பால் மெக்கன்சி(Paul Mackenzie) என்பவர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

ஷாகாஹோலா காட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கிட்டத்தட்ட 190 குழந்தைகளின் சடலங்கள் மற்றும் 1 பெரியவரின் சடலம் என மொத்தம் 191 மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

கொல்லப்பட்ட அனைவரும் ஷாகாஹோலா காட்டுப் பகுதிக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னதாக தீவிரமாக மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம்

இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த மொம்பாசா சட்ட நீதிமன்றம், 190 குழந்தைகள் மற்றும் பெரியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குட் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் தலைவரும் மத போதகருமான பால் மெக்கன்சி அவரது மனைவி ரோடா மாவேவ் மற்றும் இவர்களுடன் இணைந்து செயல்பட்ட 29 பேர் என அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.

190 குழந்தைகளை கொன்ற கொடூரன்: மதபோதகர் பால் மெக்கன்சி குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு | Cult Leader Paul Mackenzie Convicted In 191 Murder

திங்கட்கிழமை கிட்டத்தட்ட 1000 பக்கங்களில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி டயானா மொச்சாச்சே, 191 கொலைகளிலும் குற்றம் சுமத்தப்பட்ட இந்த 31 பேர் தான் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் காட்டுப் பகுதிக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னதாக மூளை சலவை செய்யப்பட்டு, அவர்களின் சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *