உலகம்

ஏவுகணை தாக்குதலில் தரைமட்டமான 25 மாடி கட்டிடம்; அதிரும் உக்ரைன்

ரஷ்யா-உக்ரைன் நாடுகள் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. தற்போதும் ரஷ்யா, உக்ரைன் மீது அவ்வப்போது ஏவு கணைகளை வீசி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயன்று வருகிறார். ஆனால் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நாட்டு ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில் சோலோமியான்ஸ்கி நகரில் உள்ள 25 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே, மொத்தம் 269 டிரோன்களை ரஷியா வீசிய நிலையில், 243 டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *