உலகம்

பிரான்சில் அமைதியின்மைக்கு அவர்களே காரணம்… புலம்பெயர்ந்தோர் மீது பழி போடும் ட்ரம்ப்

பிரான்சில் நிலவும் அமைதியின்மைக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என்று ட்ரம்ப். பிரான்சில் வெடித்துள்ள கலவரம் மற்றும் போராட்டங்களுக்கு முதன்மையான காரணம் புலம்பெயர் மக்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதயத்தில் வெறுப்பு

 

பிரான்ஸ் விவகாரம் தொடர்பில் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், காலம் கடப்பதற்குள் உங்கள் எல்லைகளை மூடி, கட்டுப்பாட்டை உங்கள் கையில் எடுங்கள் என பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தினார்.

பிரான்சில் அமைதியின்மைக்கு அவர்களே காரணம்... புலம்பெயர்ந்தோர் மீது பழி போடும் ட்ரம்ப் | Trump Blames Immigrants For

 

அத்துடன், பிரான்ஸ் எரிந்துகொண்டிருக்கிறது! முற்றிலும் வேறொரு உலகத்திலிருந்து வந்த, இதயத்தில் வெறுப்பைக் கொண்ட மக்களின் குடியேற்றம், ஒருகாலத்தில் மகத்தான நாடாகத் திகழ்ந்த அந்த நாட்டைச் சிதைத்துவிட்டது என்றார்.

பிரான்சில் ஏற்பட்ட அமைதியின்மை, அதிக ஆசிரியர்களையும் சிறந்த பள்ளிச் சூழல்களையும் கோரிய மாணவர்களின் கோரிக்கையுடன் தொடங்கியது.

பின்னர் அது, தொழிற்சங்கங்களையும், விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் குறித்துக் கவலை கொண்ட மக்களையும் உள்ளடக்கி விரிவடைந்தது. மட்டுமின்றி, அதிக பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட பிரெஞ்சு உள்விவகார அமைச்சகம் 550,000 பேர்கள் என தெரிவித்துள்ளது; அதேசமயம், சிஜிடி (CGT) தொழிற்சங்கம் இந்த எண்ணிக்கையை 800,000 எனக் குறிப்பிடுகிறது.

இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், குடியேற்றம் குறித்தவை அல்ல; மாறாக, அவை விலைவாசி உயர்வு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பானவை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் அமைதியின்மைக்கு அவர்களே காரணம்... புலம்பெயர்ந்தோர் மீது பழி போடும் ட்ரம்ப் | Trump Blames Immigrants For

 

அமைதியான முறையில் தொடங்கப்பட்ட பேரணிகள், காலப்போக்கில் தீவைப்பு, கொள்ளை மற்றும் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதல்களாக மாறின. நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடையிலேயே இந்த வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

இதனிடையே, சுமார் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் உள்விவகார அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.

பாரிஸில், இதுவரை இல்லாத அளவாக 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மிதிவண்டிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தடுப்புகள் எரிந்த நிலையில், அவற்றின் எஞ்சிய பாகங்கள் வீதிகளில் சிதறிக்கிடந்தன.

மூன்றாம் உலக நாடுகளின்

 

பல வீதிகளில் கடைகளின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டும், கார்கள் எரிந்தும் காணப்பட்டன. பாரிஸிலும் பிற நகரங்களிலும் முகமூடி அணிந்த இளைஞர்களால் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டன. சுமார் 500 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

பிரான்சில் அமைதியின்மைக்கு அவர்களே காரணம்... புலம்பெயர்ந்தோர் மீது பழி போடும் ட்ரம்ப் | Trump Blames Immigrants For

 

பிரான்சில் அமைதியின்மை தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்த முதல் கருத்து இதுவல்ல. முன்பு, பிரான்ஸ் முழுவதும் பரவிய வன்முறையை அவர் கேலி செய்திருந்தார்.

பிரான்ஸ் புரட்சிகளுக்கு மிகவும் ஏற்ற இடமாகத் தெரிகிறது. நம்பவே முடியவில்லை! நாம் பிரான்சுக்குச் சென்று அந்தப் புரட்சியில் கலந்துகொள்வோம் என்று ட்ரம்ப் விளையாட்டாகக் கூறியிருந்தார்.

பிரான்சில் அமைதியின்மைக்கு அவர்களே காரணம்... புலம்பெயர்ந்தோர் மீது பழி போடும் ட்ரம்ப் | Trump Blames Immigrants For

 

ட்ரம்ப் மட்டுமின்றி, துணை ஜனாதிபதி வான்ஸ் கூட, இந்த அமைதியின்மைக்குக் குடியேற்றமே காரணம் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய தாராளவாதிகள், பன்முகத்தன்மை மற்றும் கருணை என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் மக்களை பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்குள் அனுமதித்தனர்.

அவர்கள், ஒன்றிணைதல் மற்றும் இணக்கத்தன்மை குறித்த அடிப்படைக் கேள்விகளைப் புறக்கணித்தனர் என தனது சமூக ஊடகப் பக்கத்தில் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் இதற்கு முன்பும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், சமூகக் கொந்தளிப்புகளையும் சிக்கல்களையும் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தியுள்ளார். குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது அவரது அரசியலின் மைய அம்சமாக இருந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *