பலதும் பத்தும்

இப்படியும் ஒரு கின்னஸ் உலக சாதனை; அமெரிக்காவில் நடந்த சம்பவம்

ஒரு நிமிடத்தில் வாயால் அதிக காகித விமானங்களைப் பிடித்து, அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள ஸ்டான்லி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29-ந் திகதி அன்று, டேவிட் ரஷ் தனது 13 வயது மருமகள் அலி ரஷ் என்பவருடன் இணைந்து புதிய உலக சாதனையை செய்துள்ளார்.

அதாவது ஒரு நிமிட காலக்கெடுவிற்குள், அலி எறிந்த காகித விமானங்களில் 20 விமானங்களை டேவிட் தனது கைகளைப் பயன்படுத்தாமல், வாயாலேயே கச்சிதமாகக் கவ்விப் பிடித்து இந்த இலக்கை எட்டினார்.

இதன் மூலம் அவர்கள் புதிய உலக கின்னஸ் சாதனை படைத்தனர்.

இந்த சாதனை குறித்து டேவிட் ரஷ் கூறுகையில், “சாதாரண காகித விமானங்கள் மிகவும் கூர்மையாக இருப்பதால், அவை முகத்தில் குத்தும்போது காயம் ஏற்படும் என்ற பயத்தில் பல வருடங்களாக இந்த முயற்சியை ஒத்திவைத்தேன். பின்னர், முகத்திற்குப் பாதிப்பு தராதவாறு, நுனிப்பகுதி மழுங்கலாக இருக்கும்படி காகித விமானங்களை வடிவமைத்துப் பயன்படுத்தினோம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே 150-க்கும் மேற்பட்ட விசித்திரமான கின்னஸ் உலக சாதனைகளைப் புரிந்துள்ள டேவிட் ரஷின் சாதனைப் பட்டியலில் இந்த காகித விமான சாதனையும் இணைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *