கவிதைகள்

“கல்விக்குத் தெய்வமே கலைவாணி தாழ்பணிந்தேன்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
                மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 

 

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் மாதரசி
உள்ளக் கமலத்தில் உயரறிவை இருத்திடம்மா
கள்ளமில்லா மனத்தைத் தந்திடுவாய் கலைமகளே
கல்விக்குத் தெய்வமே கலைவாணி தாழ்பணிந்தேன் 
 
அறியாமை இருளகல அம்மாநீ அருந்துணையே
அறியாத அனைத்தையும் அகமமரச் செய்திடுவாய்
அசடனாய் அவனியிலே வாழாமல் நானிருக்க
அம்மாநீ என்றுமே அபயகரம் தந்திடுவாய் 
 
கற்றவர்கள் அவையேறி இருந்துவிடச் செய்திடம்மா
கற்றபவைகள் கற்றுவிடக் கலைமகளே அருளிடம்மா
கசடுவறக் கற்றுவிடக் கலைமகளே துணை நீயே
எப்பொழுதும் கற்றுவிட எனக்கருள வேண்டுமம்மா
 
கற்றுவிடும் மனத்தைத் தந்துவிடு தாயே
கல்வியொடு கண்ணியத்தை இருத்திவிடு தாயே
கற்றவர்கள் கனம்பண்ணச் செய்துவிடு தாயே
கலைமகளே கழல்பணிந்தேன் காத்திடுவாய் தாயே  ! 
 
 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *