இலங்கை

யோஷித ராஜபக்ஷவுக்கு 5.15 மில்லியன் சம்பளம் – நீதிமன்றத்தில் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலத்தில் சுமார் 5,150,626 ரூபாய்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட பணமோசடி வழக்கின் விசாரணையின் போது, ​​நீதிமன்றத்தில் சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்த மொத்தத் தொகையானது, கடற்படையில் பணியாற்றிய காலத்தில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தைக் குறிப்பதாகவும், இதில் மேலதிக படிகள் (allowances) எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் சாட்சி விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *