இந்தியா

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் தொகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகிறது. இதேபோல பருவத்திற்கு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்ட செயலாளரும், நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வுமான அய்யனார் தலைமையில் அம்மையநாயக்கனூரில் உள்ள பிரசித்திபெற்ற அன்னை சுயம்பு முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், வேள்வி பூஜைகள் நடத்தி, அபிஷேக ஆராதனைகள், சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அய்யனார் எம்.எல்.ஏ. தலைமையில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஏராளமான நிர்வாகிகள் முழங்காலிட்டு, மண்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். மேலும் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் த.வெ.க. நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்ததும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *