யாழில் படையினர் எப்போது காணிகளை விடுவிப்பர்? கூற முடியாது என்கிறார் அமைச்சர்

யாழில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக திகதியை குறித்து சொல்ல முடியாது என்றும் ஒன்று இரண்டு மாதங்களில் கணிசமான காணிகள் விடுவிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது.இதன்போது காணி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலாலி கிழக்கு மக்களுக்கு சொந்தமான பகுதியில் உள்ள சிறிய சிறிய இராணுவ முகாம்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் அந்த பகுதியில் காணிகள் விடுவிக்கப்படும்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் காணிகள் விடுவிக்கப்படாது என சொல்லவில்லை.மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். விடுவிக்கப்படாத காணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றே பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக திகதியை குறித்து சொல்ல முடியாது. ஒன்று இரண்டு மாதங்களில் கணிசமான காணிகள் விடுவிக்கப்படும் – என்றார்.
வசாவிளானில் தனியார் காணியில் அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு என்ன நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் சொல்வதை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தவிர்த்தார்.
![]()